திருவாரூர்,

திருவாரூரில் வலுக்கட்டாயமாக மாணவனுக்கு முடி வெட்டிய ஆசிரியை விஜயாவை கைது செய்து காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சுரேந்திரனின் தலைமுடியை சக மாணவர்களை வைத்து ஆசிரியை விஜயா வலுக்கட்டாயமாக வெட்டியதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நலச் சட்டத்தின் கீழ் ஆசிரியை விஜயா மீது வழக்கு பதிவு செய்த கொரடாச்சேரி காவலர்கள் அவரை கைது செய்தனர். மேலும் ஆசிரியை விஜயாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: