சென்னை,

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மேலும் 7 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது. இந்த விரைவு அறிக்கையை நவம்பர் 20 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பின்னர் நவம்பர் 21 ஆம் தேதி மாற்றப்படவுள்ள புதிய பாடத்திட்டத்தின் நோக்கம், பாடங்களின் வகைகள், தயாரித்த முறை, பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் போன்றவை, tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று செய்தியாளர்கள சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மேலும் 7 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: