குறைந்த பட்ச பென்சன் ரூ. 7850 வழங்க கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு திட்ட பயனாளி ஒய்வூதியத்தில் அடிப்படையில் மாற்ற வேண்டும், தமிழ்நாடு ஓய்வூதியசட்ட விதிகளின்படி குறைந்த பட்சஓய்வூதியம் ரூ 7850 வழங்க வேண்டும்.அனைத்து அரசு ஓய்வூதியருக்கு உள்ளது போல் குடும்ப ஓய்வூதியம் ,அகவிலைபடி, மருத்துவகாப்பீடு ,மருத்துவபடி, பொங்கல் ஊக்கத்தொகை, இலவச பேருந்து அட்டை போன்றை ஓய்வுபெறும் நாளன்றே வழங்க வேண்டும், தனிக்கை இழுப்பு, எதிர்பார்ப்புக்கென விதிமீறிரூ 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பிடித்தம்செய்யகூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.மணி தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைத் தலைவர் கே.துரை , மாவட்டச் செயலாளர் இ. கிருஷ்ணமூர்த்தி, அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டதலைவர் கே. சவுந்திரம், பொருளாளர் எஸ்.பழனிசாமி, துணைத் தலைவர் கே.ஜெயராமன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்சி.எம்.நெடுஞ்செழியன், மின்வாரிய ஓய்வூபெற்றோர் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, அங்கன்வாடி ஊழியர்சங்கமாநிலத் தலைவர் சி. அங்கம்மாள்,வேளாண்மைதுறை அமைச்சுபணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.யோகராசு உட்படபலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.