தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் கடந்த 2013ம் ஆண்டு முதல்பத்மாவதி ஏஜென்சி மூலம்40 காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம் 236 பேர் பணியாற்றிவருகின்றனர். இந்தஊழியர்கள் தினமும் 9 மணிநேரம் வேலை வாங்குகின்றனர். காவலர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் மாதம் ரூ.6 ஆயிரம், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.5,500 பத்மாவதி ஏஜென்சி மூலம் வழங்கப்படுகிறது. இவர்களுகு வழங்கப்படும் ஊதியத்தில் பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்படுகிறது.

பிடித்தம்செய்ததற்கான பணத்தைமுறையான ஆவணங்கள்கொண்டு பாரமரிக்கப்படுவதில்லை. மாதமாதம் சம்பள பில் வழங்கப்படுவதில்லை தீபாவளி, பொங்கல்என எந்த பண்டிகைக்கும் விடுமுறை வழங்குவதில்லை வாரவிடுப்பு வழங்குவ தில்லை உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுத்தால் பணி நீக்கம் செய்துவிடுகின்றனர். எனவே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை, வாரவிடுப்பு பண்டிகைகால விடுப்பு வருடாவரும் சம்பள உயர்வுஇஎஸ்ஐ, பிஎப் பிடிப்பதற்கான முறையான ஆவணங்களை பாரமரிக்கவேண்டும் என வலியுறுத்திதருமபுரி அரசு மருத்துவமனை பதமாவதி ஏஜென்சி அலுவலகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.