ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலம் பெந்திரா மாவட்டத்தில் சுமார் 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் அருகில் உள்ள ரத்தன்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.