கேரள மீடியா அகாடமியும் கோழிக்கோடு பிரஸ் கிளப்பும் இணைந்து தேசிய பெண் ஊடகவியலாளர் மாநாட்டை டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நடத்த உள்ளன.

அதற்கான வரவேற்புக்குழு மாநகராட்சி துணை மேயர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஊடக பெண் செயற்பாட்டாளர்கள் தொடர்பான கருத்தரங்கம், விவாதங்கள் இந்த மாநாட்டில் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளன. கேரளத்திலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் இதில் பங்கேற்க உள்ளதாக மீடியாஅகாடமி தலைவர் ஆர்.எஸ்.பாபு, செயலாளர் கே.வி.சந்தோஷ், கேயுடபிள்யுஜே மாநில தலைவர் கமால் வரதூர் ஆகியோர் தெரிவித்தனர். கோழிக்கோடு மாநகராட்சி துணை மேயர் மீரா தர்லக் வரவேற்புக்குழு தலைவராகவும், ரஜி ஆர்நாயர் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டையொட்டி, இலச்சினை தயாரிக்கபோட்டிநடத்தப்படுகிறது. இதில் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களும் மற்ற பெண்களும் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் லோகோவுக்கு ரூ.5001 பரிசாக வழங்கப்டும். நவம்பர் 26க்கு முன்னதாக என்கிற nwjcentries@gmail.com இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கோழிக்கோடு பிரஸ் கிளப்பை 0495 2721860 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.