திருப்பூர் நவ. 24-
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள வாய்க்கால்மேடு மக்களுக்கு மாற்று இடம் கோரி வெள்ளியன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வீட்டை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வாய்க்கால் மேட்டுப்பகுதியில் சுமார் 35 ஆண்டுகளாக மக்கள் குடியிருந்துவருகின்றனர். அந்த இடத்தில் குடியிருக்கும் மக்கள் மாநகராட்சிக்கு விட்டு வரியும் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இப்பகுதி மக்களுக்கு தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 ன் கீழ்நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் கிடைத்த 7 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பொதுமக்கள் கடந்த 21 ம் தேதி மாற்று இடம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர்.

இதற்கு உரிய பதில் அளிக்காமல், மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் வெள்ளி
யன்று அதிகாலை சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் வீட்டை வாய்க்கால் மேட்டுபகுதி மக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். மக்களிடம் மனுவை வாங்கிய சட்டமன்ற உறுப்பினர் மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: