தாராபுரம், நவ 24 –
தாராபுரத்தில் கடைக்கு விற்பனைக்கு வந்த ஒரே தாரில் இரண்டு வகையான பழங்கள் இருந்தது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாராபுரம், உடுமலை ரோடு கார்னர் பகுதியில் மொத்த பழ வியாபார கடைநடத்தி வருபவர் முகம்மது சரீப் (50) இவர்துத்துக்குடி மற்றும் கரூர் பட்டவாய்தலை, கோபி பகுதியில் இருந்து அனைத்து வகை வாழைப்பழங்களையும் மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபார கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோபியில் இருந்து வந்த ஒரு வாழைத்தாரில் ஒரே தாரில் சிவப்பு கலரில் செவ்வாழையும், மஞ்சள் கலரில் ரஸ்தாளியும் இருந்தது. இந்த அதிசய வாழைத்தாரை பழம் வாங்க வந்த பொதுமக்கள் பார்த்து வியந்தனர். இந்த தாரை இன்னும் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு விற்பனைக்கு அனுப்ப உள்ளதாக முகம்மது சரீப் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: