தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தீர்ப்பு மூலம், அதிமுக என்ற கட்சி, சசிகலா – டிடிவி தினகரன் கையை விட்டு மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையை விட்டும் போயிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.ஏனெனில், இரட்டை இலைச் சின்னம், கட்சி, கொடி, தலைமை அலுவலகம் ஆகியவற்றை, இ.மதுசூதனன், ஒ. பன்னீர்செல்வம், செம்மலை அணிக்கு ஒதுக்கீடு செய்வதாகத்தான் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறதே தவிர, எடப்பாடி பழனிசாமி பெயர் எந்த இடத்திலும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் மதுசூதனன் அணியை ஆதரிப்பதாகத்தான் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தங்களை ஆதரித்தாலும் கூட, அவர்களை நம்ப முடியாது என்ற வகையிலும், அதிமுக கட்சியானது தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் ஓபிஎஸ் கைக்குப் போவதே நல்லது என்ற அடிப்படையிலும், இப்பிரச்சனையில் மத்திய பாஜக அரசு எடப்பாடிக்கு எதிராக கச்சிதமாக காய் நகர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஓரங்கட்டி விட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஓ. பன்னீர்செல்வம் சாதுரியாக அதிமுக-வை கைப்பற்றியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: