அரசுப்போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் பணப் பலன்களை வழங்காத நிர்வாகத்தையும், தொடர்ந்து தொழிலாளர்களை ஏமாற்றும்தமிழக அரசையும் கண்டித்து விழுப்புரத்தில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர்ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியப் போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் ஏராளமான பெண்கள் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பங்கேற்ற இந்த மறியல் போராட்டம் விழுப்புரம் கழக தலைமையகம் முன்புசெவ்வாயன்று (நவ.21) நடைபெற்றது.

தமிழகஅரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாதாமாதம் 1ஆம் தேதியே ஓய்வூதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு நிலுவை, பணிக்கொடை, பென்ஷன் நிலுவைஆகிய தொகைகளை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மறியல் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த போராட்டத்திற்கு நிர்வாகி கே.எஸ்.சம்மந்தம் தலைமை தாங்கினார்.

மண்டலச் செயலாளர்கள் விழுப்புரம் ஜி.ராமச்சந்திரன், காஞ்சிபுரம் வி.இமயவரம்பன், வேலூர் என்.கோவிந்தசாமி, திருவண்ணாமலை எஸ்.லட்சுமிநாராயணன், மாநில துணைச் செயலாளர் ஏ.சகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மேற்கண்ட மண்டல சங்கங்களின் நிர்வாகிகள் எஸ்.ஆறுமுகம், பி.சேசையன், எம்.பழமலை, வி.சின்ராசு, டி.கலியமூர்த்தி, டி.பரசுராமன், டி.கணேசன், ஆர்.கருணாமூர்த்தி, எஸ்.பாலசுந்தரம், என்.பிச்சாண்டி, ஏ.சுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply