திருப்பூர், நவ.20 –
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் நெருக்கடி ஏற்படுத்திய ஆட்டோ நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் இருந்து திருப்பூர் ரோட்டில் ஊருக்குள் செல்லும் முக்கியப்பாதையை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. இதை அகற்றக்கோரி அக்டோபர் 30ஆம் தேதி பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கக்பட்டது நெருக்கடிமிக்க இடத்தில் இருந்த இந்த ஆட்டோ நிறுத்தத்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு நிலவியது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அடிப்படையில் நவம்பர் 20 அன்று மேற்படி மாரியம்மன் ஆட்டோ நிறுத்தம் ஈரோடு செல்லும் சாலையில் ஆலமரம் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இத்துடன் இப்
பகுதியில் உள்ள பாதை ஆக்கிரமிப்புகளையும் அகற்றுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.