சண்கடிர்:
துப்பாக்கி வெடித்து திருமணத்தை கொண்டாடியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா நகரில் பிக்ரம்ஜித் சிங் என்பவருக்கு திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தது. திருமணத்திற்கு முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினார். கடந்த சனிக்கிழமை இரவு கொண்டாடிய போது துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் 8 வயது சிறுவன் விக்ரம்ஜித் சிங் மேல் பாய்ந்தது. இதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 3 வயது சிறுமி படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட மணமகனின் உறவினர் பல்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட சிலரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave A Reply

%d bloggers like this: