“சசிகலா சொத்து மதிப்பை பார்த்து திருப்பதி வெங்கடாஜலபதி கடும் அதிர்ச்சி..” இது ஒருவரின் முகநூல் பதிவு.

அம்பானி குடும்பம் ஆசியாவில் பெரும் பணக்காரக் குடும்பம் என செய்திவந்தால் கலாநிதி குடும்பத்தை கவனிக்கலையா என ஒருவர் கேள்வி .
தமிழகத்தில் திமுக , அதிமுக கொள்ளையடித்ததால் ஏற்பட்ட கோபமும் ; ரெய்டு என்கிற பெயரில் அதிகார பூர்வமற்று வெளியாகும் பூதாகர தகவல்களும் இந்தமாதிரி பேசவைக்கிறது .

வெங்கடசலபதி பெயாரால் நடக்கும் மெகா மெகா ஊழல்கள் பல வெளிவந்ததும் பூசி மெழுகி மூடி மறைத்ததும் மறந்து போயாச்சு !

பாபா ராம் தேவ் மட்டுமல்ல அவரது நிறுவன அதிகாரியும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆனதும் பலாயிரம் ஏக்கர் நிலத்தை சும்மா பெற்றதும் நாம் கண்டு கொள்ளாத செய்திகள். அமித ஷா மகன் விவகாரம் மூச் .ராஜஸ்தானில் பாஜக ஊழலை பேசவே தடை .செல்லா நோட்டு விவகாரமே ஊழலில் மகாசக்கரவர்த்தி . இதையெல்லாம் அவனித்தோமா ?

அரசியல்வாதிகள் ஊழலை அதுவும் பாஜக அல்லாத அரசியல்வாதிகள் ஊழலை விடிய விடிய தம் கட்டிப் பேசுகிற எவரும் அம்பானி ,அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகள் நாட்டை நாட்டு மக்களை ஏய்த்து வாரிச்சுருட்டி முதல் நூறு பணக்காரர் பட்டியலுக்கு முன்னேறும் ரகசியத்தை பேசுவதே இல்லை .

இன்னும் சொல்லப் போனால் அந்த மெகாக் கொள்ளைக்கு துணைபோய் சில எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்டு வருவோரே ஊழல் அரசியல்வாதிகள் ; எலும்புத் துண்டை பேசுவோர் அந்த மெகா கொள்ளையைப் பேசுவதே இல்லை ; மாறாக இதை உரக்கப் பேசி அதற்கு துணை போவதே ஊடகங்களின் திருப்பணியாகும் ; அதற்குக் கூலியும் உண்டு .

தனக்கு சேவகம் செய்யும் ஒருவரை பலூனாக ஊதிக்காட்டி பதவியில் அமர்த்துவதும் ; தங்கள் கொள்ளையால் மக்களிடம் அதிருப்தி ஓங்கும் போது அதே பலூனில் ஊசி குத்தி சுருங்கவைத்தோ உடைத்தோ எறிந்துவிட்டு இன்னொரு பலூணைத் தேடி ஊதிப் பெரித்தாக்குவதும் இந்த கார்ப்பரேட் சுரண்டல் உத்தியாகும் .இதனை அறியாதவரை நாம் நடத்து ஊழல் எதிர்ப்பாயினும் மக்கள் நலனுக்கான போராட்டமாயினும் விரும்பிய ஊர்போய் சேராது . வாலுபோயி கத்திவந்தது டும்டும். …. கதைதான்..

Su Po Agathiyalingam

Leave a Reply

You must be logged in to post a comment.