‘பத்மாவதி’ என்ற இந்தி படத்தைத் திரையரங்குகளுக்கு வர விடாமல் தடுக்கிறகலவரங்கள் சங்பரிவாரத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படப்பிடிப்புத்தளம் சூறையாடப்பட்டது. படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கிற்குத் தீ வைக்கப்பட்டது. மற்றொரு இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி வெடித்திருக்கிறது. தலைநகர் தில்லி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கலவரம் பரவலாக்கப்படுகிறது.

மதநம்பிக்கையை மதவெறியாகவும் சாதிய வன்மமாகவும் மாற்ற முயல்கிற ராஜ்புத் கர்ணி சேனா, அகில பாரத சத்திரிய மகாசபா போன்ற அமைப்புகள், உண்மை வரலாறு திரைப்படத் தில் திரிக்கப்பட்டிருப்பதாகவும், தன் புனிதத்தைக்காக்கத் தீக்குளித்த அரசியை இழிவுபடுத்து வதாகவும் பிரச்சனை கிளப்புகின்றன. ஆனால் பத்மாவதி கதை முற்றிலும் வரலாற்றுப்பூர்வமானது அல்ல. 14ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கற்பனைகள் அந்தக்கதாபாத்திரத்தை வைத்துப் புனையப்பட்டிருப் பதை வரலாற்றாய்வாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி யாக நடித்த தீபிகா படுகோனே ஆகியோரின் தலைகளை வெட்டுமாறு மதவெறியர்களால் அறிவிக்கப்படுகிறது. பத்மாவதியை விரும்பும் அலாவுதீன் கில்ஜி என்ற முஸ்லிம் மன்னனின் கதையும் சம்பந்தப்படுவதும், அடக்கமான பெண்ணுக்கு இலக்கணமாகக் கற்பிக்கப்படும் பத்மாவதி கதாபாத்திரம், படத்தில் சுதந்திரமாக ஆடிப்பாடுவதாகக் காட்டப்படுவதும் இவர்களது ஆத்திரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசமைப்பு சாசனத்தின் கீழ் ஆட்சிக்கு வருகிறவர்கள் எந்தவொரு கலையாக்கமும் இடையூறின்றி வெளியாவதற்குத்தான் உதவ வேண்டும். ஆனால் ராஜஸ்தான், உ.பி. மாநிலங்களின் பாஜக அரசுகளோ, கலவரக்காரர் களுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. படத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாதபோதே படக்காட்சிகளில் மாற்றம் செய்யாமல் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புகிறார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே. இதனிடையே திரைப்படத் தணிக்கை வாரிய மும், சான்றிதழுக்கான விண்ணப்பத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி படத்தைத் திருப்பி அனுப்பியிருக்கிறது. உலக நாடுகளின் கருத்துச் சுதந்திர நிலவரவரிசையில் 3 இடம் கீழிறங்கி இந்தியா 136வது இடத்திற்கு வந்திருப்பதாக எல்லை தாண்டிய செய்தியாளர்கள் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இது கருத்துரிமைப் பிரச்சனை மட்டுமல்ல. வன்முறையாளர்களின் கவலை பத்மாவதியின் பெருமையைக் காப்பாற்றுவதும் அல்ல. மக்களிடையே மதப்பகைமையை மூட்டிவிடுகிற தீய உள்நோக்கமும், புனிதத்தின் பெயரால் பெண்களைப் பூட்டிவைக்கிற ஆணாதிக்க வக்கிர நோக்கமுமே உள்ளன. இந்தியச் சமுதாயத்தின் மாண்பு பற்றிய அக்கறையோடு அவை முறியடிக்கப்பட்டாக வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: