ஏற்காடு, நவ.19-
சேலம் மாவட்டம் ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் பொன்விழா சங்கமம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களை பள்ளி முதல்வர் அருட்சகோ.சூசை அலங்காரம் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். சேலம் வழக்கறிஞர் சங்க செயலாளர் அய்யப்பமணி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினருக்கு முன்னாள் மாணவர்கள் பொன்விழா நினைவு சங்கமம் நிகழ்ச்சியின் நினைவாக நினைவுப்பரிசினை முன்னாள் மாணவர் இளங்கோ வழங்கினார்.

முன்னாள் மாணவர்கள் பேசும்போது தங்கள் வாழ்வில் மறக்கமுடியாத நாட்கள் பள்ளி நாட்கள் என்றும், சிலர் மருத்துவராகவும், கடற்படையில் உயர் பதவி வகித்தவராகவும், தொழில்நுட்பவியல் பொறியாளர், ஆடிட்டர் மற்றும் தொழிலதிபராகவும் வெற்றிகரமாக வாழ்பவர்களாகவும் உள்ளனர். தங்கள் வளர்ச்சியில் பள்ளியின் பங்களிப்பே முதன்மையானது என கூறினர்.முடிவில் பள்ளி பாடலை மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து முன்னால் மாணவர்களும் பாடினர்.

Leave A Reply

%d bloggers like this: