இராமேஸ்வரம், நவ.19-
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். எட்டு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமை காலை 440-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சனிக்கிழமை இரவு 10 மணிக்கு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது ஐந்து ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெய்லஸ் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த பூபதி ஆகியோரின் இரண்டு விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

படகில் இருந்த ஜெய்லஸ், மெல்டன், விஜய், நவீன், நடராஜன், சண்முகவேல், முனியாண்டி, தர்மராஜ் ஆகிய எட்டு மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிகாங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்து வலைகள் மற்றும் மீன்பிடி உப கரணங்களை கடலில் வெட்டிவிட்ட னர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.50
ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை இழப்புடன் கரை திரும்பினர். கடலில் நடைபெற்ற சம்பவம் குறித்து மீனவசங்கத்தலைவர்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்த மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறுகையில் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் சிறைப் பிடிப்பு சம்பவத்தால் மீன்பிடித் தொழில் அழிந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் மெத்தனத்தால்தான் இலங்கை அரசு அத்துமீறி செயல்படு வதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும் ஞாயிறன்று ஊர்க்காவல்துறை நீதி மன்ற நீதிபதி ஜாய் மஹில்மகாதேவன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப்பின் அனைவரை யும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை யடுத்து மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.