திருவனந்தபுரம்;
பாஜக மாவட்டத் தலைவரின் தூண்டுதலின் பேரில் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் மேயர் வி.கே.பிரசாந்த் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தின் போது கூட்ட அரங்கிற்கு வெளியில் நின்ற ஆர்எஸ்எஸ் குண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பாஜக திருவனந்தபுரம் மாவட்ட தலைவர் சுரேஷ் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எல்டிஎப் மாவட்டக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

மேயரை பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் கவுன்சிலர்கள் சேர்ந்து முதுகில் தள்ளி வெளியே கொண்டுவர முயன்ற போது அவர் மாநகராட்சி அலுவலகத்தின் மாடிக்கு செல்ல முயன்றார். அப்போது மேயரை பாஜக கவுன்சிலர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் கீழே விழுந்த மேயருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

பாஜக கவுன்சிலர்களும் வெளியிலிருந்து நுழைந்தவர்களும் வன்முறையில் இறங்கியதாக மேயர் தெரிவித்துள்ளார். கூட்டம் முடிந்து வெளியில் வந்த மேயரை பாஜகவினர் பின்தொடர்ந்து வந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்த மேயர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.