உதகை, நவ.16-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் இன்று (வெள்ளியன்று ) சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

உதகை ஆர்சிடிசி கீழ்த்தள கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் மாற்று திறனாளிகள் பங்கேற்று பயனடைய வேண்டுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகலுடன் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மேலும் ஆதார் அட்டை எடுக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் கலந்துகொண்டு ஆதார் அடையாள அட்டை எடுத்துக்கொள்ளலாம் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: