பொள்ளாச்சி. நவ,16-
பொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஜான்சி பிரியா தீயிட்டு கொலை செய்யப்பட்டார். இந்தகொலையில் தொடர்புடைய இருவர் மீது பலியல் வன்புணர்வு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள செஞ்சேரிபுத்தூர் கிராமத்தை சேர்ந்த தலித் மாணவி ஜான்சி பிரியா. இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். ஏற்கனவே இவரது பெற்றோர்கள் இறந்த நிலையில் அவரது பாட்டி கமலம் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க சமூகத்தை சேர்ந்த செல்வக்குமார் (27) என்பவர் ஜான்சியுடன் பழகிவந்திருக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் ஞாயிறன்று செல்வக்குமார் ஜான்சியை சந்தித்து பேசியிருக்கிறார். சிறிது நேரத்தில் ஜான்சி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

இந்நிலையில் ஜான்சியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, ஜான்சி தன்னை ஏமாற்றி செல்வக்குமார் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றார் என வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து செல்வக்குமாரை தேடி வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே இந்த பிரச்சனையில் சண்முக வடிவேல் என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர் காவல்துறையினர் இருவர் மீதும் பாலியல் வன்புணர்வு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். அதன் பின்னர் இருவரையும் பொள்ளாச்சி அமர்வு நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின்படி இருவரையும் கோவையில் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.