விருதுநகர், நவ.15-
சோவியத் யூனியன் ஆட்சியில், தூரத்தில் உள்ள ஒரு பகுதியில் புல் வெட்டும் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரது குழந்தையின் கால், அந்த எந்திரத்தில் சிக்கி, துண்டாகி விட்டது. இதையடுத்து, உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் அங்கு வரவழைக்கப்பட்டு, காயமடைந்த சிறுவன் மற்றும் அவனது கால் அதில் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக துண்டான கால் சேர்க்கப்பட்து. காரணம், சோவியத் யூனியனில் மருத்துவம் 100 சதவீதம் இலவசமாக வழங்கப்பட்டது. அங்கு, தொழிலாளர்களுக்கு 6 மணிநேரம் மட்டுமே வேலை.

அறிவியலை உலகின் நன்மைக்காக மாற்றி அமைத்தது சோவியத் ஆகும். முதன் முதலில் வின்வெளிக்கு லைக்கா என்ற நாயை, அனுப்பி திரும்ப வரவழைத்தது சோவியத். பின்பு, வாலண்டினா என்ற பெண்ணை வின்வெளிக்கு அனுப்பி வைத்தது.  அந்நாட்டிற்கு சென்று வந்த தந்தை பெரியார், ரவீந்திரநாத் தாகூர் போன்ற தலைவர்கள் அனைவரும் அந்நாட்டை கொண்டாடினார்கள். குழந்தைகளை பராமரிக்க தனியாக காப்பகங்களை அமைத்தது சோவியத். முதியோர்களை தற்போது, பாரமாக நினைக்கும் சூழலில் அவர்களை கொண்டாடிய அரசு சோவியத். சோவியத் யூனியன் ஒன்றாக இருந்தவரை, அமெரிக்கா, சிறிய நாடுகள்மீது படையெடுத்தது கிடையாது. தற்போது, ஆப்கானிஸ்தானில் காபூல் தவிர பிற பகுதிகள் தாலிபான் வசம் உள்ளது. ஈராக் மீது தாக்குதல் நடத்தி, சதாம் உசேனை கொன்றது. தற்போது 3 பகுதிகளாக அந்நாடு உள்ளது. லிபியாவில் படையெடுத்து அங்கிருந்த கடாபி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்தது.

இரண்டாம் உலகப் போரில் தன் சொந்த நாட்டு மக்கள் 2 கோடி பேரை பலி கொடுத்து உலகிற்கே விடுதலை வாங்கிக் கொடுத்தது சோவியத். பல நாடுகளில் சுதந்திரத்திற்காக போராடிய மக்களுக்கு ஆதரவு கொடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்ற போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா கப்பல் படையை அனுப்பியது. அப்போது, இந்தியாவிற்கு ஆதரவாக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி வைத்தது சோவியத். இதையடுத்து அமெரிக்கா பின் வாங்கியது என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.