காஞ்சிபுரம் நகராட்சியின் வீட்டு வரி உயர்வைக் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (நவ. 15) ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று  (அக். 15) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை வகித்தார். செயல்படாத பெருநகராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் உரையாற்றினார்.

பெருநகராட்சியின் அதிகாரிகள் மக்கள் பணி செய்யாமல் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் உள்ளதாகவும்  குற்றஞ்சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள்,  உயர்த்தப்பட்டுள்ள வீட்டுவரி மற்றும் புதியதாக போடப்பட்டுள்ள குப்பைகளை பெறுவதற்கான  வரிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெரு நகரக்குழு செயலாளர் சங்கர், நகரக் குழு உறுப்பினர்கள் சௌந்தரி, கே.ஜீவா, ஒய்.சீதாராமன், இ.பாண்டியன், இ.சங்கர் வெங்கடேசன், லட்சுமிபதி உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: