காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா செயல்பட்டு வருகின்றது. இப் பூங்காவில் 15 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் மாலா என்ற ஆறு வயது பெண் சிங்கத்திற்குக்   கடந்த 13ம் தேதியன்று ஆண் குட்டி இறந்த நிலையில் பிறந்தது.  இதனால் மாலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் புதனன்று (நவ.15) காலை பெண் சிங்கம் மாலாவும் இறந்து விட்டதாக பூங்கா நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகி கூறுகையில், பிரசவத்தின் போது மாலாவின் கர்ப்பப்பை கிழிந்துவிட்டதால் உயிரிழந்ததாகப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக  கூறினார்

Leave A Reply

%d bloggers like this: