ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர் பாக தீக்கதிர் சென்னைப் பதிப்பு முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் சில கருத்துக் களை தெரிவித்திருந்தார்.
அந்தக்கருத்து நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக உள்ளது என்றும்
இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல்துறையின் மத்திய
குற்றப்புலனாய்வு பிரிவுக்குட் பட்ட சைபர் கிரைம் பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியது. இதை
யடுத்து அவர் புதனன்று நேரில் ஆஜராகி தனது பதிவு குறித்து விளக்கம் அளித்தார். அதைக் காவல்துறையின் ஆய்வாளர் பதிவு செய்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகத்தியலிங்கம், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது நீதிபதி தெரிவித்த சில கருத்துக்கள் தொடர் பாகத் தனது கருத்தைப் பதிவு செய்ததாகவும் தனிப்பட்ட முறையில் தமக்கும் நீதிபதிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார். தாம் அளித்த விளக்கத்தைக் காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், க.உதயகுமார், பா.சுந்தர
ராசன், சி.கல்யாண சுந்தரம், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், எம்.ராமகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் எஸ். சிவக்குமார், ஜெ. பிரதாபன், ஆர். திருமூர்த்தி, கே.
முருகன், எஸ்.சீனு உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: