சியோல்,
தென் கொரியாவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
தென் கொரியாவில் இன்று காலை லோசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் இலேசான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அப்பகுதியில் உள்ள அணு உலைகளுக்கு இந்த நிலநடுக்கத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள்  வெளியாகியுள்ளன

Leave A Reply