ஹராரே:
ஜிம்பாப்வே 1980 வருடம் இங்கிலாந்திடம் சுதந்திரம் பெற்றது.சுதந்திரம் பெற்ற தருணத்திலிருந்து நேற்று வரை ஜிம்பாப்வேவில் ராபர்ட் மோகபி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.ராபர்ட் மோகபி ஆட்சி முதல் 20 வருடங்கள் மிகவும் நன்றாகவே சென்றது. ஜிம்பாப்வே பல்வேறு கட்டங்களில் பொருளாதர விகிதத்தில் முன்னேறியது. 2000 ஆண்டு முதல் ராபர்ட் மோகபி அறிவித்த புதுமையான திட்டங்களால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பஞ்சத்தின் நிலை தொடுமளவிற்கு வறுமை நிலவியது.இருந்தாலும் மக்கள் அதிபர் மீது ஓரளவு நம்பிக்கை வைத்து சகித்து கொண்டிருந்தனர்.

ஆனால் திடீரென சில வாரங்களுக்கு முன்பு துணை அதிபர் ‘எமர்சன் மனன்காக்வா’ அதிரடியாக கட்சியை விட்டு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராபர்ட் மோகபி மனைவி கிரேஸ் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டின் சட்ட விதிமுறைகள் மற்றும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக போகப்போக அதிபரை மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர்.இதை சாதகமாக பயன்படுத்திய முன்னாள் துணை அதிபர் ‘எமர்சன் மனன்காக்வா’ மற்றும் தலைமை ராணுவ அதிகாரி ‘சிபுசிசோ சோயோ’ ஆகியோர் கூட்டாக இணைந்து ராணுவ ஆட்சி நடைபெற திட்டமிட்டனர்.

இன்று காலை ராபர்ட் மோகபி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவி கிரேஸ் ராபர்ட் மோகபியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இவர்களது சொந்த வீடும் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறது. ராபர்ட் மோகபி ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.அதிபரை கைது ராணுவம் கைது செய்துள்ளதால் ஏறக்குறைய ராணுவ ஆட்சி அமைந்துவிட்டது என்றே கூறலாம்

Leave A Reply

%d bloggers like this: