செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த 4 ம்தேதி பெண் காவலருக்கும் இரு வழக்கறிஞர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனையடுத்து பெண் காவலர் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இரு வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக்  கூறி செங்கல்பட்டு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: