புதுதில்லி;
தலைநகர் தில்லியில் காற்று விஷமாக மாறியுள்ளது. பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில், இப்பிரச்சனைக்கு தீர்வு காண தில்லி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவதே காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என்று கூறிய தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், அந்த வகையில், அவ்விரு மாநில முதல்வர்களையும் சந்தித்துப் பேசப்போவதாக கூறியிருந்தார். அதன்படி இன்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை, கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: