மிலன்:
நம் நாட்டுக்கு கிரிக்கெட் போல ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து தான் உயிர் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு கால்பந்தை அதிகம் நேசிக்கிறாரக்ள்.அதே போல தான் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் இத்தாலி நாட்டு கால்பந்து ரசிகரக்ள் கால்பந்து என்றாலே எந்த வேலையாக இருந்தாலும் முதலில் போட்டியை பார்த்து விட்டு தான் அடுத்த வேலையை செய்வார்கள்.சாதாரண கிளப் போட்டிகளுக்கே பசி பட்டினி பார்க்காமல் ரசிகர்கள் குவிவார்கள்.அந்தளவுக்கு வெறிபிடித்த குணம் கால்பந்தில் பதிந்துள்ளது என்றால் பாருங்கள். இதற்காவே அந்நாட்டு பட்ஜெட்டுடன் உள்ளூர் போட்டிகளுக்கான செலவையும் இணைத்து ரசிகர்களை குஷிப்படுத்துகின்றனர்.கால்பந்தில் இத்தகைய சிறப்பு சிறப்புகளை கொண்ட இத்தாலி ரசிகர்கள் தலையில் இவ்வளவு பெரிய இடி விழும் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.

அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கும் பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வாய்ப்பை நான்கு முறை சாம்பியனான இத்தாலி இழந்தது.உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிப் பெறுவதற்கான போட்டியில் முதல் ஆட்டத்தில் இத்தாலியை ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.இதனால் ஆரம்ப தோல்வி இத்தாலி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இருந்தாலும் வரும் ஆட்டங்களில் பார்த்துக்கொள்ளலாம் என மனதை சமாதானப் படுத்திக்கொண்டனர் இத்தாலி ரசிகரக்ள்.நேற்று நடந்த ஆட்டத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இத்தாலி களமிறங்கியது. இத்தாலியின் மிலன் நகரில் நடந்த இந்த போட்டியைப் பார்க்க 76 ஆயிரம் மக்கள் குவிந்திருந்தனர்.பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், இரு அணிகளும் கோலடிக்கவில்லை. போட்டி டிராவில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் வென்றதால் உலகக் கோப்பை போட்டிக்கு 30வது அணியாக தகுதிபெற்றது.

இத்தாலி வீரர்கள் மைதானத்தில் உறைந்து போய்விட்டனர். ரசிகர்களும், டிவியில் போட்டியை பார்த்தவர்களும், அதிர்ச்சியில் ஆழந்தனர். இத்தாலி முழுவதும் சோகமயமாகவே காட்சியளித்தது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் தோல்வி இத்தாலி ரசிகர்களை மட்டும்மல்லாமல் கால்பந்து உலகமே அதிர்ச்சியில் உள்ளது.ஒரு சிறப்புமிக்க அணி தகுதி போட்டிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளதால் இது கனவா நனவா சகித்துக்கொள்ள முடியாத மனநிலை உருவாகியுள்ளது…!

Leave A Reply

%d bloggers like this: