லக்னோ,
ஹால் டிக்கெட்டுடன் ஆதார் அட்டையும் தேர்வு அறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சாமியார் யோகி ஆதித்யநாத் அரசு அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. உத்தரபிரதேசத்திலும்  10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் அடுத்த  2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு பதிவு செய்யும் போதும், தேர்வு எழுத வரும் போதும், ஆதார் கொண்டு வர வேண்டும்.

ஆள்மாறாட்டத்தை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயமாக்கபடுகிறது. ஏதேனும் ஒரு பள்ளி மாணவர் ஆதார் இல்லாமல் தேர்வு எழுத முடியாமல் போனால் அந்த பள்ளியின் முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட், ஆதார் கார்டையும் தேர்வு எழுதும் அறைக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆதார் எண் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply