சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தலித் இயக்கங்கள் மற்றும் முற்போக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே புதனன்று (நவ. 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய குடியரசு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.அன்புவேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன், திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), தலித் கிறித்துவ மக்கள் கூட்டமைப்பு பே.பெலிக்ஸ், பால்பன்னீர் செல்வம் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கூட்டமைப்பு), பிச்சைமுத்து (அறம் கல்வி அறக்கட்டளை), இளையராஜா (தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு), அசாருதீன் (மாணவர் இந்தியா), வேழ வேந்தன் (தேசிய அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு), முத்து முருகேசன் (தேசிய தலித் மக்கள் சம்மேளனம்), எவிடென்ஸ் கதிர் (செயல் இயக்குநர் எவிடென்ஸ்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

Leave A Reply