வாஷிங்டன்,
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ர மண்டோ அருகேயுள்ள ரான்சோ தெக்மா பகுதியில் உள்ள வீட்டுக்குள் ஒரு அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதையடுத்து தான் வந்த வாகனத்தில் அந்த வீட்டின் கேட்டை உடைத்துக்கொண்டு வேகமாக வெளியே சென்றார்.
இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் இருந்த குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். பின்னர் வெறியுடன் சென்ற அந்த நபர் ஒரு தொடக்க பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒரு குழந்தை காயம் அடைந்தது. அங்கிருந்து வெளியேறிய வந்தவர் தெருக்களில் வந்தவர்கள் மற்றும் கார்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான்.  அதில் 10 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு துணை அதிபர் மைக் பென்ஸ், கலி போர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் ஆகியோர் கண்டனமும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

கடந்தவாரம் டெக்சாசில் பாப்டீஸ்ட் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  இதில் பலர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: