அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புதனன்று (நவ. 15) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,  ‘‘அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மசூலிப்பட்டினத்திலிருந்து வடமேற்கு திசையில் 240 கி.மீ தொலைவில் உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகுதொலைவில் உள்ளதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிபட்சமாக தஞ்சையில் – 7 செ.மீ., வாழப்பாடி, திருவையாறு, வெண்பாவூர், ஆடுதுறையில் தலா 5. செ.மீ மழைப்பதிவாகியுள்ளது’’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: