நாகர்கோவில்;
நாகர்கோவில் அருகே 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தப்பட்டது.

பறக்கையில் 17 வயது சிறுமிக்கும், வள்ளியூரைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பறக்கை சென்று விசாரணை நடத்தினர்.அதில் 17 வயது சிறுமிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் “தனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை எனவும், படிக்க விரும்புவதாகவும் சிறுமி கூறியதை அடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்ட விரோதம் என்று, திருமண ஏற்பாடுகளை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரித்தனர்.

பின்னர் சிறுமியை தொடர்ந்து படிக்க வைப்பதாக பெற்றோர் கடிதம் எழுதி கொடுத்ததையடுத்து, அந்த சிறுமியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: