திருப்பூர்,

கடந்த 2016ம் ஆண்டு உடுமலை பேருந்து நிறுத்தம் அருகே ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சங்கர் வழக்கில் வரும் டிசம்பர் .12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சங்கர், 22. தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர், உயர் வகுப்பைச் சேர்ந்த 19 வயது கவுசல்யாவை 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் சங்கரிடமிருந்து பிரிந்து வந்து விடும்படி கவுசல்யாவை அவரது உறவினர்கள் தொடர்ந்து மிரட்டினர். கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் உடுமலைப்பேட்டையில் உள்ள கடைக்கு சென்ற சங்கரையும் கௌசல்யாவையும், கும்பல் ஒன்று  அரிவாளால் தாக்கியது. இதையடுத்து சங்கரையும் கவுசல்யாவையும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சங்கர் உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் கௌசல்யா உயிர் பிழைத்தார்.
இதைத்தொடர்ந்து கொலைக்கு காரணமான கௌசல்யாவின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சங்கர் கொலை வழக்கின் இறுதி விசாரணை இன்று திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. வரும் டிசம்பர் 12ம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.