தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நடுப்படுகை பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவரின் மகன் சந்தோஷ்குமார்(17). இவர் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ள பள்ளிக்கு வந்த அவர், வகுப்பறையில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்காட்டுப்பள்ளி காவலர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: