நாமக்கல், நவ,14-
ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்யக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல்லில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மக்கல் அவதியுறும் நிலை
யில், மேலும் சுமையை அதிகரிக்கும் வகையில் ரேசனில் விநியோகிக்கப்பட்டு வந்த சர்க்கரையின் விலையையும் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியிருக்கிறது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கு விரிவு படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக மனு அளிக்கும் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்த தலைவர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வி.சிவசண்முகம், செயலாளர் பி.எம்.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.சம்பூர்ணம் துவக்க உரை ஆற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பி.செங்கோடன், மாவட்ட செயலாளர் சி.துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் இடைக்குழு செயலாளர் பி.ஜெயமணி நிறைவுரை ஆற்றினார். சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சபாபதி நன்றி தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: