சென்னை;
ரேசன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்கப்பட மாட்டாது என தமிழத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் அரசின் உணவுத்துறை அமைச்சரான காமராஜ் கூறியுள்ளார்.உளுந்தம் பருப்பு கொள்முதலையே நிறுத்தி விட்டதாக கூறியுள்ள அவர், ரேசன் கடைகளில் இனி துவரம் பருப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவும் கனடியன் பருப்பு, துவரம் பருப்பு, மசூர் பருப்பு என ஏதாவது ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 774 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய்யும், சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்பட்டு வந்தன.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திடீரென துவரம் பருப்பு, பாமாயில், உளுந்தம் பருப்பு விநியோகம் நடக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, மீண்டும் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகத்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் உளுந்தம் பருப்பு மட்டும் கிடைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக, ஒரிஜினல் துவரம் பருப்பு விநியோகமும் நிறுத்தப்பட்டு, மசூர் பருப்பு வழங்கப்பட்டது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் ரேசன் சர்க்கரை விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது.தற்போது, உளுந்து இனிமேல் வழங்கப்படாது என்று அதிகாரப்பூர்வமாகவே உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: