சேலம், நவ-14.
பேரூராட்சிகளில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என ஓமலூர் சிபிஎம் தாலுகா 22-வது மாநாடு வலியுறுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மாநாடு பாலிக்கடை பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் எம்.ராமன் செங்கொடியை ஏற்றிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கடாச்சலம் துவக்கவுரையாற்றினார். மாநில குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி நிறைவுரையாற்றினார். தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர் முன்வைத்த அறிக்கையின் மீது பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.

இதில் பேரூராட்சி பகுதிகளுக்கு ‘நூறுநாள் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். விசைத்தறி, கைத்தறி, பாய்தறி உள்ளிட்ட சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும். பூ, பால், கரும்பு உள்ளிட்டவைகளின் விவசாயிகள் உற்பத்திக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். செம்மாண்டப்பட்டியில் கைத்தறி பூங்கா அமைத்திட வேண்டும். ஓலப்பட்டி, அரங்கனூர் ஊர்களை மேட்டூர் தொகுதியில் இருந்து ஓமலூர் பகுதிக்கு மாற்ற வேண்டும். சிந்தாமணியூர் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
மாநாட்டில் புதிய ஓமலூர் தாலுகா செயலாளராக பி.அரியாக்கவுண்டர் மற்றும் 9 பேர் கொண்ட ஓமலூர் தாலுகா குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: