“கேன்சர் கவர்” என்னும் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை  எல்.ஐ.சி நிறுவனம்   நவ.14 அன்று  (செவ்வாய்) சென்னையில் அறிமுகம் செய்தது.

சென்னையில் செவ்வாயன்று (நவ.14) செய்தியாளர்களிடம் பேசிய எல்ஐசி மண்டல மேலாளர் ஆர். தாமோதரன் கூறியதாவது:
இது பங்குச் சந்தையுடன் இணையாத திட்டம். மேலும் இதன் பிரீமியத்தை ஆண்டு அல்லது அரையாண்டுத் தவணைகளில் செலுத்தலாம்.

காப்பீட்டுதாரர் பாலிசி காலத்தில் ஆரம்ப மற்றும், அல்லது முதிர்ந்த நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய வந்தால் பாலிசி விதி மற்றும் வரைமுறைகளுக்குட்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் இரண்டு விதமான பயன்களுக்கான தெரிவுகள்உள்ளன.  முதலாவது  தெரிவில் காப்பீட்டுத்தொகை ஒரே சீராக இருக்கும். இரண்டாவது தெரிவில், முதல் ஐந்து ஆண்டுகள் அடிப்படைக் காப்பீட்டுத் தொகையில் 10 விழுக்காடு அளவில் காப்பீட்டுத் தொகை அதிகரிக்கும்.

ஆரம்ப நிலை புற்றுநோயாக இருந்தால் தொகையின் 25 விழுக்காடு வழங்கப்படும். மேலும் 3 வருடத்திற்கான பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும். முதிர்ந்த நிலை புற்றுநோயாக இருந்தால், 100 விழுக்காடு காப்பீட்டுத் தொகை அல்லது தெரிவு 2-ன் படி உயர்த்தப்பட்ட காப்பீட்டுத் தொகையிலிருந்து ஆரம்ப நிலையில் தொகை ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால் அதைக் கழித்தது போக, மீதியுள்ள தொகை வழங்கப்படும். மேலும், முதிர்ந்த நிலையில், காப்பீட்டுத் தொகையின் ஒரு விழுக்காடு, 10  ஆண்டுகளுக்கு, காப்பீட்டுதாரர் உயிரோடு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் மாதந்தோறும் வழங்கப்படும். மேலும் கட்டவேண்டிய பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும். முன்பே உள்ள நோய் நிலைகள் விலக்கப்படும். பாலிசி தொடங்கிய நாள், புதுப்பித்த நாளிலிருந்து 180 நாட்கள் காத்திருக்கும் காலமாகும்.

யார்? யார் ? தகுதி
20-65 வயதுள்ளவர்கள் பாலிசி எடுக்கலாம். மேலும் 75 வயது வரை பலன்கள் கிடைக்கும். காப்பீட்டுத் தொகை 10 லட்சம் முதல் 50 லட்சங்கள். இணையதளம் வழியாகவும் இப்பாலிசியைப் பெறலாம். புற்றுநோய் அதிகரிப்பு மற்றும் மருத்துவத்திற்கான அதிகத் தொகையைக் கணக்கில் கொண்டு எதிர்பாராத செலவினங்களை எதிர்கொள்ள இத்திட்டம் இத்தருணத்தில் மிகவும் இன்றியமையாத திட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நிறுவன மக்கள் தொடர்பு மண்டல மேலாளர் பி.சத்தியவதி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: