ஈரோடு, நவ.14-
பவானி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பாவானி தாலுகா 10 ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிதாலுக்கா 10ஆவது மாநாடு 12.11.2017 ஆம் தேதி பவானியில் உள்ள பாலாஜிபத்மாவதி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.நடராசன் வாழ்த்துரை வழங்கினார். தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் முன்வைத்த அறிக்கையின்மீது பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.

தீர்மானங்கள்:
மாநாட்டில் பவானி அரசுதலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்ளை நியமிக்கவேண்டும். உயர்சிகிச்சைகள் செய்வதற்கான முறையில் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பவானி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளைகள் தடுக்கப்பட வேண்டும். பவானிபுதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள குப்பைகிடங்கை அப்புறப்படுத்தவேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் தேர்வு:
பவானிதாலுக்காவின் புதிய செயலாளராக எ.ஜெகநாதன் மற்றும் 9பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: