பாட்னா;
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது; இதுதொடர்பாக இந்தியாவும் பாகிஸ்தானும் எத்தனை முறை போர் நடத்தினாலும் எதுவும் நடக்கப் போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, 2 நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இது பாஜக வட்டாரத்தில் கடும் சர்ச்சையை கிளம்பியது.இந்நிலையில், வழக்கறிஞர் முராத் அலி என்பவர் பாட்னா நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இன்று இந்த மனுவை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஜெய்ராம் பிரசாத், பரூக் அப்துல்லா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

%d bloggers like this: