தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFTN) தமிழகத்தில் மென்பொருள் விழிப்புணர்வு செயல்பாடுகளை கடந்த 9 வருடங்களாக மேற்கொண்டு வருகிறது. கட்டற்ற மென்பொருள் என்பது எந்த வித தடையுமின்றி பயனருக்கு முழு சுதந்திரத்தையும் தரும் வகையில் உருவாக்கப்படும் மென்பொருள் ஆகும். பிற மென்பொருட்கள் யாவும் பெரும் நிறுவனங்களால் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மென்பொருளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை பயனரிடமிருந்து மறைத்து உருவாக்கப்படும். அவ்வகையான மென்பொருட்கள் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை நமக்கே தெரியாமல் ஊடுருவி பிற நிறுவனங்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் இருந்தாலும் நமக்கு அது தெரியாத வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும். மென்பொருள் வல்லுநர்களாலேயே கூட அவ்வாறான மென்பொருட்களின் மூல நிரலை (Source code) பார்க்க முடியாத வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் கட்டற்ற மென்பொருட்கள் யாவும் எவரும் எளிதில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அந்த மென்பொருட்களின் செயல்பாடு எப்படி நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அவ்வாறான மென்பொருட்களின் மூல நிரல் வெளிப்படையாக அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிரப்பட்டிருக்கும். மேலும் அவ்வாறான மென்பொருட்கள் யாவரும் தங்களின் விருப்பப்படி மாற்றங்கள் செய்து பிறருக்கு பகிர்ந்தும் வெளியிட சுதந்திரத்தை கொடுக்கும் வகையில் GPL காப்புரிமையின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும்.
Data என்பது Google, Facebook போன்ற எந்த ஒரு பெருமுதலாளியிடம் போய் சேராமல், அனைவராலும் எளிதில் பயன்படுத்தக் கூடியவையாகவும், அணுகக்கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கான வகையில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் தரவுகள் யாவும் அனைவராலும் பயன்படுத்தும்படியாக வெளியிடும் முயற்சிகள் உலகெங்கும் நடந்துக் கொண்டிருக்கின்றன. தகவல் களஞ்சியமான விக்கிபீடியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இடங்களை, Open Data எனப்படும் அனைவராலும் எந்த தடையும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய தரவை உருவாக்கும் முயற்சியில் தற்போது தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFTN) ஈடுபட்டுள்ளது. OpenStreetMap எனப்படும் முயற்சி உலகிலுள்ள அனைத்து இடங்களையும் குறியிட்டு, Open Data விற்கு அனைவரின் பங்களிப்பின் மூலம் அனைவரும் நம்மை சுற்றியுள்ள இடங்கள் பற்றிய தகவல்களை ஓரிடத்தில், எந்தவொரு தனியார் நிறுவனத்தின் தகவல் திருட்டுமின்றி, பயன்படுத்தும் வகையிலான சுதந்திரமான ஒரு களஞ்சியத்தை உருவாக்குவதே இந்த முயற்சி.

இந்த நிகழ்வு நவம்பர் 12-17 வரை நடைபெறவுள்ளது. இந்த வாரம் முழுவதும் Openstreetmap -ற்கு அனைவரும் பங்களிக்கலாம். பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அதிகமாக பங்களிக்கும் பங்களிப்பாளர்களுக்கு 18-ம் தேதி FSFTN சார்பில் பரிசுகளும் வழங்கப்படும்.

பங்களிப்புக்கான வழிமுறைகள்:
StreetComplete எனப்படும் செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்ய வேண்டும்.
https://www.openstreetmap.org/ என்ற இணையதள முகவரியில் OpenStreetMapக்கான கணக்கை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFTN) சார்பில் ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பங்கு கொள்ள http://osm-leaderboard.fsftn.org/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களின் பங்களிப்புகளை துவங்கலாம்.
நாம் செய்யும் ஒவ்வொரு பங்களிப்பும் பிற்காலத்தில் பலரின் பயன்பாட்டுக்கு உதவும். எனவே பங்குபெறுவோம், பங்களிப்போம்.

மேலும் விவரங்களுக்கு – https://fsftn.org/blog/fsftn-mapathon-map-places-on-the-go
தொலைபேசி எண் – 9043475346

Leave A Reply

%d bloggers like this: