நாட்டிலேயே முதன்முறையாக வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காகத் தனி விடுதி கட்டிக்கொடுத்துள்ளது கேரள அரசு.

வடமாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களுக்கு வரும் மக்கள் அதிகமானோர் சாலைப் பணிகளிலிருந்து பல நிலைகளிலும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வேலை பார்க்கும் தென்மாநிலப் பகுதிகளில் போதிய முறையான பாதுகாப்புப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முறையாகச் செவி சாய்த்து நாட்டிலேயே முதன்முறையாகக் கேரள மாநில அரசு ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது. வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கேரள அரசு அவர்களுக்கென தனி விடுதி ஒன்றை விரைவில் கட்டித்தரப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்கோடு பகுதியில் கேரள பொதுத்துறை நிறுவனம் 3 மாடிகள் கொண்ட விடுதிக் கட்டடத்தைக் கட்ட உள்ளது. 640 பேர் வரையில் தங்கும் வகையில் உள்ள இந்த விடுதியில் 32 சமையலறைகள், 86 கழிவறைகள் என விசாலமாகக் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கேரள மாநிலம் கொச்சி மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்த வெளிமாநில ஊழியர்களுக்கு அரசின் சார்பில் விருந்தும், அவர்கள் உழைப்பில் உருவான மெட்ரோ இரயிலில் அவர்களை பயணம் செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

%d bloggers like this: