சென்னை,
சென்னையில் வேளச்சேரியில் ஒருதலைக்காதலால் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலனியில் வசித்து வந்தார் இந்துஜா என்ற பெண் . ந்இந்துஜாவும், ஆகாஷ் என்பவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இந்துஜாவை ஆகாஷ் காதலிப்பதாக கூறியுள்ளார். இந்துஜா மறுப்பு ஆகாஷ் காதலை ஏற்க இந்துஜா மறுத்து விட்டார். விரக்தியில் இருந்த ஆகாஷ் நேற்றிரவு இந்துஜா வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது இந்துஜாவின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதாவும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பெட்ரோல் கேனுடன் வந்த ஆகாஷ், நின்று கொண்டிருந்த இந்துஜா, அவரது தயார், சகோதரி மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். மூவருமே எரிந்தனர். இதில் இந்துஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்துஜாவின் தாயார், சகோதரி ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான ஆகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply