வேலூர்,

திருப்பத்தூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் , மாடப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பிற்காக மாணவன் சென்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த இருவர் மாணவனை அருகில் உள்ள மாந்தோப்பிற்கு தூக்கி சென்று மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த மாணவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவலர்கள் தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: