சென்னை;                                                                                                                                                                               ஜெயா டிவி-யின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன், மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டு முன்பு செவ்வாயன்று கொட்டும் மழையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடந்த இரண்டு வருடமாக ஜாஸ் சினிமாவை கவனித்து வருவதாகவும், ஜெயா டிவி நிர்வாகத்தையும் மார்ச் மாதத்திலிருந்து பார்த்து வருவதாகவும் தெரிவித்த விவேக், 5 நாள் சோதனையில் இது சம்பந்தமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டபோது, அவை அனைத்துக்கும் விபரமாக பதிலளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தனது மனைவிக்கு கல்யாண நேரத்தில் போட்ட நகைகள் தொடர்பாக வருமான வரித்துறை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உரிய கணக்கு வழக்குகளும் தம்மிடம் உள்ளதாக கூறிய விவேக், அதுதொடர்பாக விரைவில் அதிகாரிகளிடம் தெரிவிப்பேன்; அடுத்து வரும் நாட்களிலும் வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றார்.வருமான வரித்துறை சோதனையில் பழிவாங்கும் நடவடிக்கை இருக்கிறதா என்பது குறித்து பதிலளித்த விவேக், “வருமானவரித் துறையினர் அவர்கள் கடமையை செய்தார்கள்; குடிமகன் என்ற முறையில் என் ஒத்துழைப்பை அளித்தேன், பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதவில்லை; யார் தப்பா பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்” என்றும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: