திண்டுக்கல்;
மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. இதில் எஸ்.ஏ.டி.டேக்வாண்டோ கிளப் மற்றும் திண்டுக்கல் டேக்வாண்டோ கிளப்பின் சார்பாக பள்ளி மாணவ, மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 11 ஆம் வகுப்பு மாணவி மோனாஸ்ரீ, 8 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், 8 ஆம் வகுப்பு மாணவி அபிமா, 10 ஆம் வகுப்பு மாணவர் ஹரிஹரன், 12 ஆம் வகுப்பு மாணவர் முகமதுசாருகான், 7 ஆம் வகுப்பு மாணவர் சந்தோஷ், 11 ஆம் வகுப்பு மாணவர் நவீன்குமார் ஆகிய 5 பேர் வெங்கல பதக்கங்களையும் வென்றனர்.

பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களை எஸ்.ஏ.டி. டேக்வாண்டோ கிளப் தலைவர் ஜோதிபாசு, திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்க தலைவர் ஜோதிமுருகன் ஆகியோர் பாராட்டினர்.

பெரம்பலூர் மாணவிகள் பதக்க வேட்டை
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியைச் சேர்ந்த டேக்வாண்டோ வீராங்கனைகள் 15 பேர் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதினருக்கு பல்வேறு எடை பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர்.

Leave A Reply