நாகர்கோவில்;
மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி குன்னுவிளை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் படித்து வருகிறார். மாணவியின் உறவினர் செல்போனுக்கு சில ஆபாச படங்களை அனுப்பிய நபர், அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, “தனக்கு மாணவியை திருமணம் செய்து வைப்பதோடு, 5 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் மாணவி தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவேன் “ என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் உறவினர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியின் உறவினருக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டியவர் வாறைச்சவிளை பகுதியைச் சேர்ந்த சேன்டில் பிரேம்ஸ் என்ற ஸ்டேன்லி (28) என்பது தெரியவந்தது. கட்டட தொழிலாளியான அவரை கைது செய்து  மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: