சபரிமலை ஐயப்பன் கோயிலை தேசிய புனித யாத்திரை மையமாக அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் நலனைக் கருதி, கோயிலின் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், சபரிமலை கோயில் யாத்திரைக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply