ஈரோடு, நவ.14-
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை அதிகாரிகள் திரும்பப் பெற்ற நிலையில், புதிய பட்டாவை உடனடியாக வழங்கக்கோரி பாதிக்கப்பட்டோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் வடமுகம் வெள்ளோடு கிராமம் பகுதியில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 662 குடும்பங்களில் 349 குடும்பங்களுக்கு கடந்த 2000 ஆம் ஆண்டு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அதுவும் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னே நிலம் வழங்கப்பட்ட நிலையில், அவ்விடமும் தனித்தனியாக அளந்து கட்டவில்லை. இதற்கிடையே, பட்டா வழங்கிய ஆறு மாத காலத்தில் புதிய பட்டா திருத்தி வழங்குவதாக கூறி பழைய பட்டாவை அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர். அதன்பின் ஒவ்வொரு முறையும் வட்டாட்சியர் மாறிக்கொண்டு வருவதால் அதிகாரிகள் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட பழைய பட்டாக்களுக்கு பதிலாக புதிய பட்டா வழங்கக்கோரி திங்களன்று 60க்கும் மேற்பட்டோர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: